ஹோம் /தேனி /

வெறும் 9 நிமிடத்தில் தேனி - போடி செல்லலாம்.. வெற்றியடைந்த சோதனை ஓட்டம்!

வெறும் 9 நிமிடத்தில் தேனி - போடி செல்லலாம்.. வெற்றியடைந்த சோதனை ஓட்டம்!

X
ரயில்

ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்  

தேனி போடி இடையான ரயில்வே பணிகள் 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் அதிவேக ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனியில் இருந்து போடிக்கு 9 நிமிடத்தில் வந்த சோதனை ஓட்ட ரயில் இன்ஜினை பொதுமக்கள்ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

தேனி - போடி இடையான ரயில்வே பணிகள் 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் அதிவேக ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

சோதனை ஓட்டம் :-

தேனியில் இருந்து போடி வரையிலான தண்டவாளம் பொருத்தும் பணி நிறைவு பெற்ற நிலையில் தற்போது இருப்புப் பாதை சோதனைக்காக ரயில் இன்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மதுரை-போடிநாயக்கனூர் இடையிலான மீட்டர் கேஜ் பாதை கடந்த டிசம்பர் 31 2010 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கி 12 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது. இதில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான சேவை தொடங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தேனி போடி இடையிலான பணிகள் துரிதமாக நடைபெற்றது.

தேனி - போடி இடையிலான அகல ரயில் பாதை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு கட்டத்தை எட்டி வரும் நிலையில் இன்று இருப்புப் பாதை ஆய்வு செய்வதற்காக தேனியில் இருந்து போடி வரையிலான ரயில் இன்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க | தேனி ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.. பக்தி பரவசம் பொங்க பக்தர்கள் பங்கேற்பு...

ஏற்கனவே ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது 120 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது . 12 ஆண்டுகளுக்கு பின்னர் போடி ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறுவதை காண போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனர் .

ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறுவதை தொடர்ந்து பாதைகளில் பொதுமக்கள் வர வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

120 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்த ரயில் இன்ஜின் தேனியில் இருந்து போடிக்கு 9 நிமிடத்தில் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது . மதுரை மண்ட பொறியாளர் சூரியமுத்து தலைமையில் ரயில்வே துறையினர் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தினர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், " இருப்பு பாதையில் ஒரு சில சிறிய சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . விரைவில் சிக்கல்கள் சரி செய்யப்பட்ட பின் ரயில் பெட்டியுடன் கூடிய சோதனை ஓட்டம் நடைபெற்று விரைவில் மதுரையில் இருந்து போடி வரை ரயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

First published:

Tags: Local News, Theni, Train