ஹோம் /தேனி /

தேனியில் பூட்டியிருந்த கடையில் திடீர் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

தேனியில் பூட்டியிருந்த கடையில் திடீர் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

தேனி

தேனி தீ விபத்து

Theni fire accident | தேனி கொட்டக்குடி பூட்டியிருந்த கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே உள்ள கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. பூட்டிய கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் இன்றி பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்து

தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே மூன்று மாடிக் கொண்ட வணிக வளாக கட்டிடம் உள்ளது. இதில் மூன்றாவது மாடியில், விழாக்களுக்கு அலங்காரம் செய்யும் கடை உள்ளது. காலை முதல் மாலை வரை இயங்கும் இந்த கடையில் மாலை நேரத்தில் கடையை அடைத்துவிட்டு பணியாளர்கள் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல மாலை நேரத்தில் பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தேனி தீ விபத்து

சிறிது நேரத்தில் பூட்டிய கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நொடிகளில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தேனி தீ விபத்து

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேனி அல்லிநகரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தேனி தீ விபத்து

ஆனாலும் கடைக்குள் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அலங்கார பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. கடை பூட்டியிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்பது தீயணைப்புத் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தீ விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni