முகப்பு /தேனி /

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க தேனியில் சிறப்பு கருத்தரங்கம்

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க தேனியில் சிறப்பு கருத்தரங்கம்

X
மகளிர்

மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம்

Theni District | மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் தொழில் முனைவோரை ஊக்கிவிக்கும் கருத்தரங்க நிகழ்ச்சியும், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தொழில் முனைவோரை ஊக்கிவிக்கும் கருத்தரங்க நிகழ்ச்சியும் , சிறந்த தொழில் முனைவோருக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,பெண்களின் முன்னேற்றத்திற்காக உள்ள வணிக ரீதியான தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது.

குறிப்பாக கால்நடை வளர்ப்போர், வேளாண்மை சார்ந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பால் உற்பத்தியின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பது, மாட்டுச் சாணத்தில் இருந்து இயற்கை உரங்கள் தயாரிப்பது மற்றும் அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.

Read More : நெல்லையில் சிலம்பம் வீராங்கனைகளை உருவாக்கி வரும் சாதனைப் பெண்!

மேலும் பொருட்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் அவற்றை விளம்பரப்படுத்துவதற்கான தொழில் நுணுக்கங்கள் குறித்தும் நிகழ்ச்சியில் தொழில் வல்லுநர்கள் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினர். அத்துடன்,பெண் தொழில் முனைவோர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த கருத்தரங்கில் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் பச்சைமால், தமிழ்நாடு கால்நடைத் துறை உதவி பேராசிரியர் திவிஷா, உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா, புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Agriculture, Local News, Theni, Women, Women's Day