முகப்பு /தேனி /

தேனிக்கு வந்த அரிய வகை ஆந்தை.. பொதுமக்கள் ஆச்சரியம்!

தேனிக்கு வந்த அரிய வகை ஆந்தை.. பொதுமக்கள் ஆச்சரியம்!

X
அரிய

அரிய வகை ஆந்தை

Theni owl | போடிநாயக்கனூர் நகர்ப்பகுதியில் வழி தவறி வந்த அரிய வகை கழுகு ஆந்தையை வனத்துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

போடிநாயக்கனூர் நகர்ப்பகுதியில் வழி தவறி வந்த தலையில் கொம்பு போன்ற இறகுகள் கொண்ட அரிய வகை கழுகு ஆந்தையை வனத்துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

அரிய வகை ஆந்தை :-

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஸ்டேட் பேங்க் எதிரில் உள்ள அரசமரம் அருகில் சுமார் இரண்டு கிலோ எடை உள்ள வித்தியாசமான வகையிலான ஆந்தையை பொதுமக்கள் கண்டுள்ளனர். ஆச்சரியத்துடன் ஆந்தையை கண்டு களித்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அரிய வகை ஆந்தை இந்தியன் ஈகிள் அவ்ள் என்று அழைக்கப்படும் இந்தியக் கழுகு ஆந்தை என்பதை உறுதி செய்தனர்.

இந்தியக் கழுகு ஆந்தைக்கு பாறைக் கழுகு ஆந்தை, வங்கக் கழுகு ஆந்தை என்ற பெயரும் உண்டு. பொதுவாக இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் இந்த ஆந்தையின் தலையில் கொம்பு போன்ற இறகுகள் உள்ளதால் பெரிய கொம்பு ஆந்தை எனவும் கூறுகின்றனர்.

குன்று மற்றும் பாறை நிறைந்த காடுகளில் காணப்படும் இந்த வகைகளான ஆந்தையின் உடல் முழுவதும் பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்களாகக் காணப்படும். இந்த வகையை சேர்ந்த ஆந்தைகள் தனியாக எங்கும் செல்லாது . இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட ஆந்தைகள் ஒன்றாக செல்வதை பார்க்க முடியும்.

top videos

    தற்போது போடி பகுதியில் தனியாக இருந்த இந்திய கழுகு ஆந்தை என்ற அரிய வகை ஆந்தை வழி தவறி வந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் கணித்தனர். வனத்துறையினர் அரிய வகை ஆந்தையை உயிருடன் பத்திரமாக பிடித்து கால்நடை மருத்துவரிடம் முதலுதவி செய்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.இந்த வகை ஆந்தை தனது இரைகளை கழுகு போல் வேட்டையாடும் தன்மை உடையது என்று வனத்துறையினர் கூறினர்.

    First published:

    Tags: Local News, Theni