தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 2.3 கோடி ரூபாயில்புதிய வாரச்சந்தை மற்றும் பொதுசுகாதார ஆய்வக கட்டடிட பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. கம்பம் பகுதி எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன்,ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகராஜன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
வாரச்சந்தை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022 & 23 இன் கீழ் தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட ஏழாவது வார்டு பகுதியில் ரூபாய் 2 கோடி ரூபாய்செலவில் வாரச்சந்தை அமைக்கும் பணி மற்றும் 15 ஆவது மத்திய நிதி குழு மானியத்தில் கூடலூர் ஆரம்ப சுகாதார வளாகத்தினுள் ரூபாய் 50 லட்சம் செலவில் பொது சுகாதார பிரிவு ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இது குறித்த தீர்மானங்கள் கடந்த மாதம் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், 51 கடைகள், வாகன நிறுத்ததம், தொழிலாளர் தங்கும் இடம், கழிப்பறை உள்ளடக்கிய புதிய வாரச்சந்தை கட்டடிட பணிக்கான பூமிபூஜைநடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நடைபெற்றது.
கம்பம் சட்டமன்றஉறுப்பினர் இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்றஉறுப்பினர் மகாராஜன் பூமிபூஜையில் கலந்துகொண்டு திட்ட பணிகளை தொடங்கிவைத்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக தேனி மாவட்ட துணைச்செயலாளர் குரு இளங்கோ, நகர்மன்ற துணைத் தலைவர் காஞ்சனா சிவமூர்த்தி, ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி, கூடலூர் திமுக நகரசெயலாளர் லோகந்துரை, மாவட்ட இளைஞரணி ஹானஸ்ட்ராஜ் மற்றும் அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேனி : தி.மு.க அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி- தொடங்கிவைத்த ஆட்சியர்
செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni