ஹோம் /தேனி /

தேனியில் தன்னை கடித்த கட்டுவிரியனுடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்... டாக்டர்கள் நடுக்கத்துடன் சிகிச்சை...

தேனியில் தன்னை கடித்த கட்டுவிரியனுடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்... டாக்டர்கள் நடுக்கத்துடன் சிகிச்சை...

பாம்புடன் சிகிச்சைக்கு வந்த நபர்

பாம்புடன் சிகிச்சைக்கு வந்த நபர்

Theni | கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த போது தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

கட்டிட வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிங்காபுரத்தை சேர்ந்தவர் விவேக்(25). இவர் தேவாரம் பகுதியில் கட்டிட கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் 27ம் தேதி தேவாரம் அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த விவேக் கட்டிடத்தில் அருகாமையில் உள்ள சிமெண்ட் கல்லை தூக்கும்பொழுது அதில் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு சீறிப்பாய்ந்து அவரது வலது கையை கடித்தது.

பாம்பு கடித்ததில் அதிர்ச்சி அடைந்து அலறிய விவேக்கை கண்டு அவருடன் வேலை பார்த்து வந்த நபர்கள் விவேக்கை கடித்த பாம்பை உடனடியாக பிடித்து விவேக்கை கடித்த பாம்புடன் போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாம்புடன் சிகிச்சைக்காக வந்த நபர்களை கண்டு மருத்துவர்களும், செவிலியர்களும் சற்று அச்சத்துடன் சிகிச்சை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : “உப்பு, காரம் அதிகமாக உள்ளது“ - தேனி அரசு பள்ளி மாணவர் விடுதிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

துரிதமாக செயல்பட்ட விவேக் உடன் வேலை பார்த்த நபர்கள் உரிய நேரத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றதால் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு அவர் உயிர் தப்பினார்.

இதுகுறித்து பாம்பால் கடிபட்ட விவேக் கூறுகையில் “கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென பாம்பு கடித்து விட்டது. பாம்பு கடித்தவுடன் எனது நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மருத்துவர்கள் எந்த பாம்பு கடித்தது என்பதற்கு ஏற்ப எளிய முறையில் சிகிச்சை அளிக்கும் விதமாக, என்னை கடித்த பாம்பை எனது நண்பர்கள் பிடித்து பையில் போட்டு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர்” என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni