தேனி மாவட்டம் கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தம்மனம்பட்டி அருகே உள்ள சாலையோர கடையில் உப்புத் தண்ணீரில் 60 நாட்கள் வரை ஊற வைக்கப்பட்ட மாங்காய், நெல்லிக்காய், நாரங்காய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகk; மற்றும் கேரளாவை இணைக்கும் மிக முக்கிய மாவட்டமாக தேனி மாவட்டம் விளங்குகிறது. கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்லும் பெரும்பாலான மக்கள் தேனி மாவட்டம் வழியாகவே கேரள மாநிலத்தை சென்றடைவர்.
சாலை மார்க்கத்தில் தேனி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு சென்றடைவோர் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று தேனி மாவட்டத்தின் அழகை ரசித்து பின்னர் கேரள மாநிலத்திற்கு செல்வர்.
இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் கன மழை - அணைகளின் நீர் மட்டம் கிடு கிடு உயர்வு
இவ்வாறு தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே காணப்படுகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை, சுருளி அருவி, சோத்துப்பாறை அணை, வைகை அணை, சின்ன சுருளி, மேகமலை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை காண்பதற்கு கேரள மக்களும் தேனி மாவட்டத்திற்கு வருகை புரிவது வாடிக்கையாக உள்ளது.
சுற்றுலா தலத்திற்கு சிறந்து விளங்கும் மாவட்டமாக உள்ள தேனி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் தேனி கொச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் திராட்சை இளநீர் கரும்புச்சாறு மாங்காய் போன்ற இயற்கை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக உள்ளன.
குறிப்பாக கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இரு புறத்திலும் இவ்வாறான கடைகளை காண முடியும். அந்த வழியில் கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி செல்லும்பொழுது தம்மனம்பட்டி அருகே உள்ள சாலையோர கடையில் கண் கவரும் வகையில் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது ரசிக்கும்படியாக இருந்தது.
ஊறுகாய் விற்பனை :
லோயர் கேம்ப் அருகே உள்ள தம்மனம்பட்டியில் சாலை ஓரத்தில் ஊறுகாய் கடை ஒன்றை நடத்தி வருகிறார் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிபு என்ற நபர். உப்பு தண்ணீரில் ஊற வைத்த நெல்லிக்காய், மாங்காய், மிளகாய், எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இயற்கையாக கிடைக்கும் மாங்காய் நெல்லிக்காய் உள்ளிட்ட பொருட்களை அப்படியே சாப்பிடுவதற்கும் 60 நாட்கள் உப்பு தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதற்கும் சுவையில் பெரும் வித்தியாசம் உள்ளதாக கடையின் உரிமையாளர் சிபு கூறுகிறார்.
உப்பு தண்ணீரில் ஊற வைத்த நெல்லிக்காய் மாங்காய் போன்ற பொருட்களை வாங்கி சாப்பிடும் பொதுமக்கள் அதன் சுவை பிடித்துள்ளதால் தொடர்ந்து அவற்றை வாங்கி செல்கின்றனர் எனவும் கடையின் உரிமையாளர் கூறுகிறார்.
சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் விதமாக கண் கவரும் வகையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாட்டில்களில் உப்பு தண்ணீரில் ஊற வைத்த நெல்லிக்காய் மாங்காய் மிளகாய் எலுமிச்சை பப்பாளி அத்தி கொய்யா, மிளகு மாங்காய் மிளகு நெல்லிக்காய், உப்புத் தண்ணீர் மற்றும் மிளகாய் பொடியில் ஊற வைத்த நெல்லி மாங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலாப் பணிகள் ஊறுகாய் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். கண் கவரும் வகையில் அடிக்க வைக்கப்பட்டிருக்கும் பாட்டில்களும், பாட்டிலில் புதிய சுவைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மாங்காய் நெல்லிக்காய் போன்ற பொருள்களும் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni