ஹோம் /தேனி /

தேனி சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்.. ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்..

தேனி சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்.. ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்..

X
இரட்டை

இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

Theni Disitrict News : தேனி மாவட்டம் சுருளி பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து வகை மாடுகளை கொண்டு இரட்டை மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது. 

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய திமுக தேனி தெற்கு மாவட்டம் சுருளிப்பட்டி கிளை கழகத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சுருளிப்பட்டி சாலையில் இரட்டை மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது.

இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாட்டுவண்டி பந்தயம் சுருளிப்பட்டி சாலையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு

ஐந்து வகையான மாடுகளுக்கு தனித்தனியாக பந்தயம் நடத்தப்பட்டது.

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், கூடலூர், கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இந்த மாட்டு வண்டி போட்டியை கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

இதையும் படிங்க : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்.....

இந்த மாட்டு வண்டி பந்தையம் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, முயல்சிட்டு, கரிச்சான்மாடு, புள்ளிமான் என 5 வகையான பிரிவுகளில் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

இதில் கரிச்சான் மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹20,000ம், இரண்டாம் பரிசாக ₹15,000ம் மூன்றாம் பரிசாக ₹10,000ம் வழங்கப்பட்டது

பூஞ்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹15,000ம், இரண்டாம் பரிசாக ₹10,000ம் மூன்றாம் பரிசாக ₹8,000ம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது

தேன்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹10,000ம், இரண்டாம் பரிசாக ₹8,000ம் மூன்றாம் பரிசாக ₹7,000ம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

புள்ளிமான் வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹7000ம், இரண்டாம் பரிசாக ₹6,000ம், மூன்றாம் பரிசாக ₹5,000ம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

முயல்சிட்டு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹6000ம், இரண்டாம் பரிசாக ₹5,000ம் மூன்றாம் பரிசாக ₹4,000ம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

அதேபோல் மாட்டு வண்டி போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற நபர்களுக்கு கம்பம் மற்றும் சுருளிப்பட்டியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பரிசு தொகை வழங்கினர் . இந்த மாட்டு வண்டி போட்டியில் பங்கேற்க போட்டியாளர்கள் நுழைவுக் கட்டணமாக சில குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சுருளி - சுருளி பட்டி சாலையில் சீறி பாய்ந்த மாட்டுவண்டி பந்தயத்தை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் குவிந்தனர். இந்த மாட்டு வண்டி பந்தயமானது பொது மக்களின் ஆரவாரத்துடனும் போலீசாரின் பாதுகாப்புடனும் நடைபெற்றது.

First published:

Tags: Local News, Theni