ஹோம் /தேனி /

அஸ்ஸாம் - மேற்கு வங்க மாநில எல்லையில் பணியிலிருந்த கூடலூரை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு  

அஸ்ஸாம் - மேற்கு வங்க மாநில எல்லையில் பணியிலிருந்த கூடலூரை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு  

உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்

உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்

Theni | தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் அஸ்ஸாம் - மேற்கு வங்க மாநில எல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கொடி இவரது மகன் கௌதம்(35). இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய எல்லை படைக்கு அதாவது பி.எஸ்.எஃப்-க்கு தேர்வு செய்யப்பட்டு 155 பஞ்ச் பாரா பட்டாலியனில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யா(25)  என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். மனைவியுடன் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தவர் மீண்டும் பணிக்கு சென்றார்.

இந்நிலையில், அஸ்ஸாம் - மேற்கு வங்கம் மாநில எல்லை பகுதியை ஒட்டி உள்ள பாக்டோக்ரா பகுதியில் கெளதம் பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பலியானதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பொது சுகாதாரத்துறை சார்பில் 100வது ஆண்டு விழா - தேனி கலெக்டர் துவக்கி வைத்தார்

இந்த செய்தியை அவர்கள் குடும்பத்தினருக்கு

பி.எஸ்.எப்.பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து உறவினர்கள் மட்டுமின்றி கூடலூர் நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் உயிரிழந்த கௌதமின் உடலுக்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தும் காட்சிகளும், அவரது மனைவி கதறி அழும் காட்சிகளும் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni