Home /theni /

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன்- தேனி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன்- தேனி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடன் பெறுவது தொடர்பான அறிவிப்பை தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக் கடன் வழங்கும் முகாம் வரும் 5ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக்கடன் முகாம் வருகிற 5ம் தேதி நடைபெறவுள்ளது.

    வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டம், ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்கள், தாட்கோ மூலம் கடனுதவி போன்றவை வழங்கப்படுகிறது.

    இந்த முகாமில் வங்கிக்கடன் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நேரில் வந்து விண்ணப்பிக்க முடியாத நபர்கள் பாதுகாவலர்கள் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

    தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட, சுயதொழில் புரிவதை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி