முகப்பு /தேனி /

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் ஊர்காவல் படை அதிகாரி உட்பட 86 பேர் காயம்

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் ஊர்காவல் படை அதிகாரி உட்பட 86 பேர் காயம்

X
பல்லவராயன்பட்டி

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு

Pallavarayanpatti Jallikattu | தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஊர் காவல் படை அதிகாரி, பார்வையாளர்கள் உட்பட 86 நபர்கள் காயமடைந்தனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன் பட்டியில் ஸ்ரீவல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 7 மணியளவில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் என மொத்தம் 8 சுற்றுகளாக போட்டி நடைபெற்று மாலை 5 மணி அளவில் போட்டி நிறைவு பெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற 86 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பார்வையாளர்கள் 18 நபர்கள், மாடுபிடி வீரர்கள் 44 நபர்கள், மாட்டின் உரிமையாளர்  23 நபர்கள், ஊர் காவல்படை அதிகாரி ஒருவர் என மொத்தம் 86 நபர்கள் காயமடைந்தனர்.

இதில் 5 நபர்களுக்கு மட்டும் பெரிய அளவில் காயம் ஏற்பட்டதில் 3 நபர்கள் தேனி அரசு மருத்துவமனை கல்லூரியில் மேல் சிகிச்சைக்காகவும், ஒரு நபர் சின்னமனூர் அரசு மருத்துவமனையிலும், ஒரு நபர் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Local News, Theni