ஹோம் /தேனி /

தேனி ரேஷன் கடைகளில் 85 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

தேனி ரேஷன் கடைகளில் 85 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Theni Ration Shops | தேனி  மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 85 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கு தேர்வு இல்லாமல் ஆட்கள் நிரப்பட இருக்கின்றன. இது குறித்து தேனி மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 85 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கு தேர்வு இல்லாமல் ஆட்கள் நிரப்பட இருக்கின்றன. இது குறித்து தேனி மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 85 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த பணிக்குத் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://drbtheni.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 2022 நவம்பர் 14ஆம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (www.drbtheni.net ) வெளியிடப்பட்டுள்ளன.

அதன், விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை கவனத்தில் கொண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விற்பனையாளர் பணியிடத்திற்காக இணைய தளத்தில் எளிமையாக விண்ணப்பிப்பது தொடர்பாக.

Must Read : ஆளை மயக்கும் பேரழகு... வால்பாறை அக்காமலைக்கு செல்லும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

https://youtube/G6c5e2ELJD8 என்ற வளையொளி (youtube Channcl - TNCOOP DEPT) தளத்தில் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறைகுறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் drpds.thn2021@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவிமைய தொலைபேசி எண் 04546-291989 வாயிலாகவும் தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேற்காணும் வளையொளி (யூ-டியூப்) தளத்தைப் பார்த்து, தாமதிக்காமல் உரிய காலத்தில் விண்ணப்பித்து வேலை வாய்ப்பை பெற்று மகிழுங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: Job Vacancy, Local News, Ration card, Ration Shop