தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் இயங்கி வரும் வேலம்மாள் பள்ளியில் நீட் தேர்வு நடந்தது.
நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இத்தேர்வை, 20 லட்சத்துக்கும் அதிமான மாணவ- மாணவியர் எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்ச மாணவர்கள் தேர்வெழுதினர்.
மருத்துவ படிப்பு படிப்பதற்கு இடம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நீட் தேர்வு எழுதுவதற்கு தேனி மாவட்டம் முத்து தேவன் பட்டியில் உள்ள பள்ளி தேர்வறையில் தேர்வு எழுதுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட மாணவ மாணவிகள் அதிகாலை முதலே பள்ளி முன்பாக காத்திருந்தனர். இந்த தேர்வில் மாணவர்கள் 298 நபர்களும் மாணவிகள் 494 மாணவிகளும் தேர்வு எழுதினர்.
பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று மிகுந்த கெடுபிடிக்கிடையே பலக்கட்ட சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். நீட் தேர்வு எழுத வந்துள்ள மாணவ, மாணவிகளிடம் ஹால் டிக்கெட் மற்றும் ஆதார் கார்டு பாஸ்போட் புகைப்படம் அனைத்தையும் சரி பார்த்த பின்னர் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு எழுதுவதற்கு மொத்தம் அறை 34 அறைகள் ஒதுக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் தேர்வு எழுத ஒரு அறை ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதும் மாணவ மாணவிகளை கண்காணிப்பதற்கு 75 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தேனியில் நடைபெறும் தேர்வில் பாதுகாப்பு பணியில் ஒரு டிஎஸ்பி தலைமையில் 3 இன்ஸ்பெக்டர் , 6 எஸ் ஐ மற்றும் காவல்துறையினர் 20 பேர் ஊர்க்காவல் படை 10 பேர் மொத்தம் 40 பேர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Neet Exam, Theni