முகப்பு /தேனி /

தேனி | 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமானோர் பங்கேற்பு  

தேனி | 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமானோர் பங்கேற்பு  

X
கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

Theni | தேனி மாவட்டத்தில் உள்ள 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் உள்ள 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கோயில் கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம் பொம்மை கவுண்டன்பட்டியில் அமைத்துள்ள மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்தனர்.

50 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் புனரமைப்பு பணிகள் முடிவு பெற்ற நிலையில், கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்வில் யாக சாலையில் யாக குண்டங்கள் அமைத்து நெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

பின்னர் யாக சாலையில் வைத்து புனித கலச நீருக்கு பூஜைகள் செய்து தொடர்ந்து வேதாச்சாரியார்கள் கலச நீரை தலையில் சுமந்து கொண்டு விமான கலசத்தை அடைந்தனர். பின்னர் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு தீபாராதனை காட்டி பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க்கபட்டது

அதை தொடர்ந்து ஆலய மூலவரான சித்தி விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தேனி சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை

50 ஆண்டுகள் பழமையான கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை காண தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து ஆயிரக்கணக்கானோர் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Theni