தேனி மாவட்டத்தில் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பங்களா மேடுப்பகுதி வழியாகச் செல்லும் வாய்க்காலில் 4 வயது சிறுமி தவறி விழுந்த நிலையில், அருகில் இருந்த இளைஞன் உரிய நேரத்தில் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது.
தேனி கொட்டக்குடி ஆற்றின் கிளை வாய்க்காலான இராஜ வாய்க்கால் நகரின் மையப்பகுதியில் செல்கிறது. தற்போது பாசன பயன்பாடின்றி போன ராஜ வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாகக் கழிவு நீர் ஓடையாக மாறிவிட்டது.
இந்த நிலையில், பங்களா மேடு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஒட்டுநர் முத்து என்பவரின் 4 வயது மகள் கீர்த்தனா, நேற்று மாலை தெருவில் விளையாடும் போது வாய்க்காலில் தவறி விழுந்துவிட்டார். அதனைக் கண்ட அருகிலிருந்த பெண்கள் கூச்சலிட்டனர். அப்போது அப்பகுதியில் இருந்த இளைஞர் தக்க நேரத்தில் கால்வாயில் இறங்கி கழிவுநீரில் தத்தளித்த சிறுமியை உடனடியாக மீட்டார்.
View this post on Instagram
உரிய நேரத்தில் காப்பாற்றியதால், சிறுமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகிய நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்தியாளர் - எஸ். பழனிகுமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Theni, Viral Video