Home /theni /

TNSTC சார்பாக 30ஆவது ஆண்டு பேரவை கலந்தாய்வுக் கூட்டம்

TNSTC சார்பாக 30ஆவது ஆண்டு பேரவை கலந்தாய்வுக் கூட்டம்

Meeting 

Meeting 

தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் திண்டுக்கல் மண்டலம் சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொதுச் செயலாளர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

    TNSTC சார்பாக 30ஆவது ஆண்டு பேரவை கலந்தாய்வுக் கூட்டம்

    அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் CITU TNSTC சார்பாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் 30ஆவது ஆண்டு பேரவை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கலந்தாய்வு கூட்டம் :-

    தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் திண்டுக்கல் மண்டலம் சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொதுச் செயலாளர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தேனி , திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள் .

    கூட்டத்தில் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து பணிமனையை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு சங்க நலன் சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் வருடாந்திர வரவு, செலவு கணக்குகள் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளின் தேர்வும் நடைபெற்றது .

    தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தரப்படும் அதிக வேலை பளுவை குறைக்க வேண்டும், தரமான உதிரிப்பாகங்கள் வழங்க வேண்டும், புதிய பேருந்துகளை அந்தந்த பகுதிகளுக்கு பனிமனைகளுக்கு வழங்கிட வேண்டும், அகவிலைப்படியை உயர்த்தி தர வேண்டும்.

    உடனடியாக 14 வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றி 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை தொடங்கவேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும், தனியார்மயக் கொள்கையை கைவிட்டு அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை அரசே நடத்த வேண்டும் என்று பல கோரிக்கைகள் வைத்தனர் மேலும் கடந்த அதிமுக ஆட்சி செய்த தவறுகளை ஆளும்கட்சி செய்யக்கூடாது என்றும் விவாதிக்கப்பட்டது

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி