ஹோம் /தேனி /

தேனியில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை - கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை

தேனியில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை - கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை

தேனி

தேனி

Theni District | தேனி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி,  மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் பார்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், அன்றயை தினத்தில் மதுவை கள்ளச் சந்தையிலும் விற்றாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்று போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் பார்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், அன்றயை தினத்தில் மதுவை கள்ளச் சந்தையிலும் விற்றாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம், திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், காந்தி ஜெயந்தி மற்றும் மிலாது நபியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி மற்றும் அக்டோபர் 9ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேனியில் பூட்டியிருந்த கடையில் திடீர் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் 9ம் தேதி மீலாது நபி ஆகிய தினங்களை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஓட்டல்களை சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வரும் 2ம் தேதி  காந்திஜெயந்தி மற்றும் 9ம் தேதி மிலாடிநபி ஆகிய 2 நாட்களில் தேனி மாவட்ட த்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் எப்.எல்.1, உரிமம் பெற்ற பார்கள் எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3(யு), எப்.எல்.3(யுயு) மற்றும் எப்.எல்.11 ஆகியவை கட்டாயம் மூடப்பட வேண்டும்.

விற்பனைகள் மேற்கொள்ள கூடாது. இந்த 2 நாட்கள் மது விற்றால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், அன்றைய தினங்களில் மதுவை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni