முகப்பு /செய்தி /தேனி / காதல் விவகாரத்தில் ப்ளஸ் 2 மாணவன் கழுத்தறுத்து கொலையா? - தேனியில் அதிர்ச்சி சம்பவம்

காதல் விவகாரத்தில் ப்ளஸ் 2 மாணவன் கழுத்தறுத்து கொலையா? - தேனியில் அதிர்ச்சி சம்பவம்

கமலேஷ்வரன்

கமலேஷ்வரன்

தேனியில் 12-ம் வகுப்பு முடித்த மாணவன் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வீருசின்னம்மாள்புரத்தில் வசித்து வருபவர்கள் சரவணன் - ஊஞ்சம்மன் தம்பதியர். இவர்களது மகன் கமலேஸ்வரன் (18) பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த இவர் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை  மாலை வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்ற கமலேஸ்வரன் இரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் திங்கட்கிழமையும் அவர் வீட்டிற்கு வராததால் கமலேஸ்வரனின் குடும்பத்தினர், நண்பர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் பூதிப்புரம் கல்லுருணி காட்டுக்கு செல்லும் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றருகே கழுத்து அறுபட்ட நிலையில் இன்று  கமலேந்திரன் சடலமாக கண்டறியப்பட்டார். தகவல் அறிந்து வந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததில் கமலேஸ்வரனின் இரு சக்கர வாகனம் அருகே இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கமலேந்திரனின் தாய் ஊஞ்சம்மன் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த பழனிசெட்டி பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த கமலேஸ்வரன் பள்ளியில் உடன் படித்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், காதல் விவகாரம் தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் கமலேஸ்வரனை ஏற்கனவே எச்சரித்தது தெரியவந்தது.

இதையும் படிங்க : நண்பனுடன் சேர்ந்து கள்ளக்காதலி சித்ரவதை.. ஆத்திரத்தில் இளைஞனை பீர் பாட்டிலில் குத்திக்கொன்ற காதலன்

அதன் அடிப்படையில் மாணவியின் உறவினர்களை அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கமலேஸ்வரனின் செல்போன் தொடர்புகளின் அடிப்படையிலும் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   விசாரணையின் முடிவில் தான் கமலேஸ்வரன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.

செய்தியாளர் : பழனிகுமார் (தேனி)

First published:

Tags: Crime News, Love, Tamil News, Theni