முகப்பு /தேனி /

தேனி மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதும் 15,552 மாணவர்கள்.. முறைகேடுகளை தடுக்க 18 பறக்கும் படை குழு அமைப்பு..

தேனி மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதும் 15,552 மாணவர்கள்.. முறைகேடுகளை தடுக்க 18 பறக்கும் படை குழு அமைப்பு..

X
தேனி

தேனி : பொது தேர்வு

Theni district | தேனியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கவும் மாணவ மாணவிகளை கண்காணிக்கவும் 18 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 28,662 பேர் எழுதுகின்றனர். அதன்படி, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 6,326 மாணவர்கள், 6,784 மாணவிகள் என மொத்தம் 13,110 பேர் எழுதுகின்றனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8,038 மாணவர்கள், 7,514 மாணவிகள் என மொத்தம் 15,552 பேர் எழுதுகின்றனர்.

பொது தேர்வு :-

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 (திங்கட்கிழமை) முதல் துவங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரையும் நடக்கிறது. 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்காக தயாராகி பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர்.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளை ஆசிரியர்களும் பெற்றோர்களும் அறிவுரையும் ஆலோசனையும் கூறி தேர்வு எழுத அறிவுறுத்தினர்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் 142 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். மாணவ மாணவிகள் பொதுத் தேர்வு எழுதுவதற்கு வசதியாக 53 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுதவிர, 11, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தனியாக 3 தேர்வு மையங்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கவும் மாணவ மாணவிகளை கண்காணிக்கவும் 18 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,

First published: