ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் போர்வெல் எவ்வாறு அமைக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ், 100 மீட்டா் ஆழம் வரை ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு அதிகபட்சம் ரூ.3 லட்சமும், சூரிய சக்தி அல்லது மின்மோட்டாா் பம்பு நிறுவுவதற்கு ரூ.75 ஆயிரம், நீா் விநியோகிக்க குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
போடி, சின்னமனூா், கம்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட அகமலை, சின்னஓவுலாபுரம், ஆங்கூா்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, சில்லமரத்துப்பட்டி, மணியம்பட்டி, பூலானந்தபுரம், அணைக்கரைப்பட்டி, நாகலாபுரம், முத்துலாபுரம், புலிகுத்தி, அய்யம்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த, குறைந்தபட்சம் 2 ஏக்கா் பட்டா நிலமுள்ள ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறலாம்.
நிா்ணயிக்கப்பட்ட ஆழத்துக்கும் அதிகமாக ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், கூடுதல் குதிரை திறன் கொண்ட மின் மோட்டாா் பம்பு நிறுவுவதற்கும் ஏற்படும் கூடுதல் செலவினத்தை விவசாயிகள் ஏற்கவேண்டும்.
அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு, 94863-63555 என்ற எண்ணில் உத்தமபாளையம் வேளாண்மை பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளரை தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.