முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / பிரதமர் மோடி குறித்து மின்னஞ்சலில் அவதூறு கருத்து.. தஞ்சாவூர் இளைஞரை கைது செய்தது சிபிஐ

பிரதமர் மோடி குறித்து மின்னஞ்சலில் அவதூறு கருத்து.. தஞ்சாவூர் இளைஞரை கைது செய்தது சிபிஐ

மாதிரி படம்

மாதிரி படம்

நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு டெல்லியில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் விக்டரிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெயபால். அவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா. தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். இவர் தனது தந்தையின் மெயிலில் இருந்து பிரதமர் பற்றி அவதூறு கருத்துக்களை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு டெல்லியில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் விக்டரிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பிறகு அந்த இளைஞரை அழைத்து சென்று, மத்திய அரசுக்கு சொந்தமான NFTEM வளாகத்தில் வைத்து 36 மணி நேரமாக விசாரணை செய்தனர்.

தற்போது அந்த இளைஞரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, வேறு ஒரு ரகசிய இடத்தில் வைத்து மூன்றாவது நாளாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தவிர உள்ளூர் காவல்துறையினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CBI, PM Narendra Modi, Thanjavur