ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து மனு அளிக்கலாம்.!

தஞ்சை மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து மனு அளிக்கலாம்.!

தஞ்சை

தஞ்சை

Tanjore District News | தஞ்சை மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்தும், வங்கி கடன் தொழில் கடன் வேண்டுதல் குறித்து இருக்க கூடாது, மேலும், இந்த பொது பிரச்னைகள் குறித்து அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்தும், வங்கி கடன் தொழில் கடன் வேண்டுதல் குறித்து இருக்க கூடாது, மேலும், இந்த பொது பிரச்னைகள் குறித்து அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாடு சட்டசபை மனுக்கள் குழு தஞ்சை மாவட்டத்தில் விரைவில் கூடுவது என முடிவு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனைகள் , குறைகள் குறித்தான மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை பேரவை, சென்னை- 600009 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க : தஞ்சை ராஜராஜ சோழனின் மனைவி புதைக்கப்பட்ட இடம் இதுதானா! - பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில்

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் ‌‌. ஆனால் மனுவில் உள்ள பொருளானது தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலை வாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல் , வங்கி கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவல ர்களின் குறைகளை வெளி ப்படுத்துதல், போன்றவை குறித்து இருக்கக் கூடாது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து மனுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். அடுத்த மாதம் 7ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore