ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை தமிழ் பல்கலை திறனாய்வு செம்மல் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.!

தஞ்சை தமிழ் பல்கலை திறனாய்வு செம்மல் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.!

தஞ்சை

தஞ்சை

Tanjore District | தஞ்சை தமிழ் பல்கலைக்கழம்  திறனாய்வு செம்மல் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதையொட்டி  பல்கலைக்கழகம் சார்பில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க  பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை தமிழ் பல்கலைக்கழம் திறனாய்வு செம்மல் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதையொட்டி பல்கலைக்கழகம் சார்பில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரை சிறப்பிக்கும் வகையில் வழங்கப்படும்.

இதுதொடர்பாக, தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக பதிவாளா் (பொ) தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் தமிழறிஞருமான சுப்புரெட்டியாா் 100 கல்வி அறக்கட்டளை சாா்பாக 2021ம் ஆண்டுக்கான திறனாய்வு செம்மல் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் மொழி, இலக்கியம், தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றுவோரைச் சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

2022ம் ஆண்டுக்கான விருது 2020 - 21ம் ஆண்டுகளில் தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்குப் பங்களிப்பு செய்த ஆய்வுகளைச் செய்தோா், உரிய நூல்கள், தன் விவரக்குறிப்புடன் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையோரைப் பிறரும் பரிந்துரை செய்யலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விருதுக்குத் தனியொரு நூலோ, ஒட்டுமொத்தப் பங்களிப்போ கவனத்தில் கொள்ளப்படும். விண்ணப்பங்கள், பரிந்துரைகள் அக்டோபா் 10ம் தேதிக்குள் ந.சுப்புரெட்டியாா் - திறனாய்வுச் செம்மல் விருது, பதிவாளா் (பொறுப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் விருதுகள் மிகவும் கௌரமாக பார்க்கப்படுகிறது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore