முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு நல்லுறவு விருது.. விண்ணப்பிப்பது எப்படி?

தஞ்சை மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு நல்லுறவு விருது.. விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரி படம்

மாதிரி படம்

Thanjavur News : தஞ்சை மாவட்டத்தில் தொழிலாளர் நல்லுரவு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் அறிவித்துள்ளார். 

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டத்தில் தொழிலாளர் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவிற்கிணங்க, திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் திவ்யநாதன் அறிவுரைப்படி தமிழக அரசின் தொழிலாளர்துறை வாயிலாக தொழிலாளர் நல்லுறவு விருது வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு அரசு தொழில் நல்லுறவு பரிசு த்திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து விரிவான அறிக்கை

விண்ணப்பிப்பது எப்படி?

நல்ல தொழில் உறவினைபேணி பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019, 2020ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுதேர்வு செய்யும். இந்த விருதுக்குரியவிண்ணப்ப படிவங்களை தொழிலாளர்துறையின் www. labour.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது தஞ்சை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலும் பெற்று விண்ணப்பிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பிக்க கடைசி நாள் :

top videos

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு மார்ச் 31ம் தேதிற்குள் அனுப்பி வைக்கவேண்டும். விண்ணப்ப கட்டண மாக விண்ணப்பித்தவர், தொழிற்சங்கமானால் ரூ.100- ம், வேலையளிப்பவரானால் ரூ.250-ம் www.karuvoolam. tn.gov.in என்ற வலைதளத்தில் இ-செலான் மூலம் தொகை செலுத்திய அஞ்சல் செலுத்து சீட்டுவைத்து அனுப்பவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Thanjavur