முகப்பு /தஞ்சாவூர் /

புடவையில் நடைபயணம் மேற்கொண்ட தஞ்சை பெண்கள்..

புடவையில் நடைபயணம் மேற்கொண்ட தஞ்சை பெண்கள்..

X
புடவையில்

புடவையில் நடைபயணம் மேற்கொண்ட தஞ்சை பெண்கள்

Thanjavur News | 'புடவையில் ஓர் நடை பயணம்' என்ற போட்டி தஞ்சை பெரிய கோயில் முன்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் சார்பில் தமிழகத்தில் முதன் முறையாக 'புடவையில் ஓர் நடை பயணம்' என்ற போட்டி தஞ்சை பெரிய கோயில் முன்பு நடைபெற்றது. இன்னர் வீல் சங்க பொன்விழாவையொட்டி பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக இந்த போட்டி நடந்தது. இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மேயர் ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் நூற்றுக்கணக்கான மகளிர் பாரம்பரிய முறையில் புடவையில் கலந்துகொண்டனர். இந்த நடைபயணம் வயது வரம்பின் அடிப்படையில் 3 பிரிவின் கீழ் நடைபெற்றது. 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 4 கிலோ மீட்டர் தூரமும், 36 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் 3 கிலோ மீட்டர் தூரமும் நடை பயணம் செய்தனர். இந்த இரு பிரிவினருக்குமான பரிசுகளாக முதல் பரிசு ரூ.7,500ம், 2ம் பரிசுரூ.5 ஆயிரமும், 3ம் பரிசு ரூ.2,500ம், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. மேலும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 1 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்த பிரிவினருக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. 18-35 பிரிவில் ஸ்ரீநிதி என்ற கல்லூரி மாணவி, 36 - 59 பிரிவில் குழந்தையம்மாள், 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் செல்வி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். அவர்களுக்கு ரொக்க பரிசினையும் சான்றிதழ்களையும் மேயர் ராமநாதன், ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வழங்கினர்.

First published:

Tags: Local News, Thanjavur