Home /thanjavur /

தஞ்சாவூரில் விநாயகர் சிலை தயாரிப்பில் கலக்கும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள்

தஞ்சாவூரில் விநாயகர் சிலை தயாரிப்பில் கலக்கும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் விநாயகர் சிலை

தஞ்சாவூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து அசத்திவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
விநாயகர் சதுர்த்தி விழா வரவுள்ளதை முன்னிட்டு தஞ்சை வெண்ணாற்றங்கரையைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் விநாயகர் சிலை தயாரிப்பில் அசத்தி வருகின்றனர்.

இந்து கடவுளின் முழு முதற் கடவுளாம் விநாயகர் அவதரித்த தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்படுகிறது.

அதன்படி இந்த மாத இறுதியில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தஞ்சை, வெண்ணாற்றங்கரையை சேர்ந்த தாமரை மகளிர் சுய உதவி குழு விநாயகர் சிலை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

விற்பனைக்கு தயார் நிலையில் விநாயகர் சிலைகள்


12 பெண்கள் சேர்ந்த தாமரை மகளிர் சுய உதவி குழு கடந்த 2009 ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நன்றாக செயல்பட்டு வருகிறது.

இந்த குழுவில் தஞ்சைக்கு உரித்தான தலையாட்டி பொம்மை, கலை தட்டு, தஞ்சாவூர் ஓவியம் போன்ற புவிசார் குறியீடு பெற்ற கைவினை பொருட்களும், கொழு பொம்மைகள், விநாயகர் பொம்மைகள், சிலைகள் போன்ற பல வகையான கைவினை பொருட்கள் செய்யப்பட்டு, மகளிர் சுய உதவி குழு திட்டத்தின் உதவியில் தஞ்சை பூ மாலை வணிக வளாகத்தில் கடை அமைத்து, இவர்கள் செய்யும் கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விற்பனைக்கு தயார் நிலையில் விநாயகர்


விநாயகர் சிலைகள்:

விநாயகர் சிலை தயாரிப்பை பொருத்த வரையில், விநாயகர் சிலைகளை தஞ்சை மற்றும் வெளி மாவட்டங்களில் வண்ணம் பூசப்படாதநிலையிலுள்ள வெள்ளையான விநாயகர் சிலைகளை கொள்முதல் செய்து, பிறகு இவர்கள் வண்ணம் பூசி மக்களிடம் நேரடியாக விற்பனை செய்கிறார்கள். தனிப்பட்ட முறையிலும் விநாயகர் பொம்மைகள் முழுவதுமாக செய்கிறார்கள்.

கொரோனா காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக சரியான விற்பனை இல்லாததால். இந்த ஆண்டு கட்டுபாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சிலைகள் தயாரித்துவிற்கப்படுகிறது. தற்போது விநாயகர் சிலைகள் 100 லிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை ‌விற்பனை செய்கிறார்கள்.

இதுகுறித்து தாமரை மகளிர் சுய உதவி குழு தலைவி பூங்குழலி பேசும்போது, ‘கடந்த மூன்றாண்டுகளை விட தற்போது சிலைகள் தயாரிப்பதற்கான பொருட்களின் விலைவாசி  அதிகமாக இருக்கிறது மற்றும் மண் சிலைகளுக்கு கூட ஜி.எஸ்.டி போடுகிறார்கள். இதனால் சிலைகள் அதிக விலையில் விற்கப்படும் சூழல் ஏற்படுகிறது. மக்கள் எங்களை போன்ற மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி