முகப்பு /தஞ்சாவூர் /

கணவரால் பிடித்த ஸ்பேனர் - 9 ஆண்டுகளாக பிரிச்சு மேயும் தஞ்சை பெண் மெக்கானிக்...!

கணவரால் பிடித்த ஸ்பேனர் - 9 ஆண்டுகளாக பிரிச்சு மேயும் தஞ்சை பெண் மெக்கானிக்...!

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெண் மெக்கானிக் 

Thanjavur News | கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மெக்கானிக் கடையை தானே திறம்பட நடத்தி பல்வேறு டூவீலர் மெக்கானிக் வேலைகளை செய்து கொடுத்து வருமானம் ஈட்டி வருகிறார் ஜெயராணி

  • Last Updated :
  • Thanjavur, India

பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறார் தஞ்சையை சேர்ந்த பெண் மெக்கானிக் ஜெயராணி.

தஞ்சாவூர் மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெயராணி(37) இவரது கணவர் அற்புதராஜ்(47) இவர்களுக்கு திருமணமாகி 11 வயதில் ஒரு மகன் உள்ளார். அற்புதராஜ் மெக்கானிக் தொழிலை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி காலை இழந்தார்.

இதனால்,குடும்ப சூழல் காரணமாககனவர் செய்து வந்த மெக்கானிக் தொழிலை ஜெயராணிஎனக்கு கற்றுக் கொடுங்கள் நான் செய்கிறேன் என்று கூறிய நிலையில், கணவர் மறுத்திருக்கிறார் பின்பு மனைவியின் பிடிவாதத்தால் மெக்கானிக் தொழிலை கற்றுக்கொடுத்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மெக்கானிக் கடையை தானே திறம்பட நடத்தி பல்வேறு டூவீலர் மெக்கானிக் வேலைகளை செய்து கொடுத்து வருமானம் ஈட்டி வருகிறார். ஜெயராணி இவர் ஐடிஐ பிட்டர் படித்து கேரளாவில் நேவியில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்று தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். பின்னர் திருமணம் ஆனதும் தஞ்சைக்கு வந்து தனது கணவரின் தொழிலை தற்போது 8 ஆண்டுகளுக்கு மேலாக வருகிறார்.

மேலும், கடந்த ஆண்டு இந்த சிங்கபெண்ணிற்கு தனியார் தொண்டு நிறுவனம் ‘சக்தி’விருதும், தனியார் பள்ளி சார்பில் ‘சிங்கப் பெண்’ விருதும் வழங்கி பாராட்டி கௌரவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Thanjavur