ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் 1000 ஆண்டுகள் பழமையான உப்பிரிகை மண்டபம் சிதிலமடைந்து வரும் நிலையில் சீரமைக்கப்படுமா?..

தஞ்சாவூரில் 1000 ஆண்டுகள் பழமையான உப்பிரிகை மண்டபம் சிதிலமடைந்து வரும் நிலையில் சீரமைக்கப்படுமா?..

உப்பரிகை
மண்டபம்

உப்பரிகை மண்டபம்

Tanjore | 1000 ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் உப்பிரிகை மண்டபம் சிதிலமடைந்து வரும் நிலையில் சீரமைக்கப்படுமா பொதுமக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பு!!

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சையில் வரலாற்று சின்னமாக

போற்றப்பட வேண்டிய பழங்கால உப்பரிகை

மண்டபம் சிதிலமடைந்து, தற்போது பாழடைந்த கட்டிடமாக காட்சியளிக்கிறது.

தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டியில் உள்ள உப்பரிகை மண்டபம் நீலகிரி தோட்டத்துக்கு நீலகிரி தோட்டம் அக்காலத்தில் மரங்கள் நிறைந்த காட்டு பகுதியாக இருந்தது.

கோடைகாலத்திலும் நீலகிரியை போன்று குளிர்ச்சியாக இருந்து வந்த சென்றுள்ளனர். இப்பகுதிக்கு நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் விலங்குகளை வேட்டையாட செல்லும்போது வேட்டைக்கு பிறகு தங்கி ஓய்வு எடுப்பதற்காக இந்த உப்பரிகை மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சங்கீத உலகிற்கு பெயர்போன திருவையாறுக்கு பெயர் வந்தது எப்படி தெரியுமா?

உப்பரிகை என்றால் மேல்மாடி, மேல்மாடம் எனபொருள். சுட்ட செங்கற்கள், சுண்ணாம்பு காரையை பயன்படுத்தி நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தில் ஏறுவதற்கு தென்பகுதியில் 18 கருங்கல் படிக்கட்டுகள் உள்ளன. இந்த மண்டபத்தில் மொத்தம் 12 ஜன்னல்கள் உள்ளன. உள்புறத்தில் பிரம்மாண்டமான வட்ட வடிவிலான ஒரு மண்டபமும் உள்ளது. அதை சுற்றி வர நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் எட்டு தூண்களை அமைத்து மேல்தளம் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தில் உள்புற மேல்தளத்தில் ராமரின் பட்டாபிஷேக காட்சிகள் அழகிய சுதை சிற்பமாக இடம் பெற்றுள்ளது. மேற்புறத்தில் தாமரை பூ மொட்டு வடிவில் கூம்பு வடிவ கோபுரம் உள்ளது.

இதுகுறித்து மனோஜ்பட்டியை சேர்ந்த சிலர் கூறுகையில், “இக்கட்டிடம் நாயக்கர் கால, மராட்டிய கால பாணியில் கட்டப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்தில் கட்டடப்பட்ட இந்த மண்டபம் பிற்காலத்தில் மராட்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், யார் கட்டியது என்ற தகவல் கிடைக்கப்பெறவில்லை. கோடைகாலத்தில் எவ்வளவு வெப்பம் நிலவினாலும், இக்கட்டடத்தில் அதன் தாக்கம் தெரியாது. குளிர்ச்சியான காற்று வரும். அக்காலத்தில் வேட்டைக்குச் சென்ற மன்னர்கள் இந்த மண்டபத்தில் தங்கி ஓய்வு எடுத்துள்ளனர்” என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் படிக்கட்டுகள் சிதைந்து ஏறுவதற்குக் கூட இயலாத அளவுக்கு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. வரலாற்று சின்னமாகப் போற்றப்பட வேண்டிய இந்த உப்பரிகை மண்டபம் இப்போது சிறிது சிறிதாக சிதிலமடைந்து, பாழடைந்த மண்டபமாகக் காட்சி அளிக்கிறது. இதை சீரமைப்பு செய்தால் சுற்றுலா தலமாகவும் மாற வாய்ப்புள்ளது. தஞ்சையில் உள்ள சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாக மாற்ப்படவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறினர்.

வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் இந்த மண்டபத்தை சீரமைக்கவேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore