முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் சிங்கபெருமாள் குளத்தில் திட்டமிட்டு கலக்கப்படும் கழிவு நீர்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

தஞ்சாவூர் சிங்கபெருமாள் குளத்தில் திட்டமிட்டு கலக்கப்படும் கழிவு நீர்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர் சிங்கபெருமாள் குளம்

Thanjavur singaperumal lake | தஞ்சாவூரில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் குளத்தை சுற்றி ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மேலவெளி ஊராட்சி ஒன்பதாவது வார்டு பகுதியில் தஞ்சையின் மிக பழமையான சிங்கப்பெருமாள் குளம் அமைந்துள்ளது.

அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த குளத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்மு மின் வளப்பிற்காக ஏலம் விடப்படு முறையான பராமரிப்போடு இருந்தது. தற்போது மீன் வளர்ப்பு ஏதும் நடைபெறாததால் இக்குளம் தொடர்ந்து பல மாதங்களாக பராமரிப்பின்றி காணப்படுகிறது முக்கியமாக இப்பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் குளத்தில் அதிக அளவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தெற்கு கரையில் வசிக்கும் ஒரு சிலரால் சிங்கப்பெருமாள் குளத்தில் நேரடியாக கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதற்காக கல்லணை கால்வாயில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை அடைத்து விட்டு புதியதாக வீட்டிலிருந்து நேரடியாக குளத்திற்கு கழிவு நீர் செல்வதற்கு குழாய் அமைத்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கும் இக்குளத்தை வீட்டு கழிவு நீர் செல்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

ALSO READ | தஞ்சையை‌ கூல் படுத்திய கோடை மழை... குஷியான பொதுமக்கள்..!

இதனால் குளம் முழுவதும் கழிவுநீர் கலந்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி சேர்ந்த மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்று அசம்பாவித செயல்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து குளத்தை கைப்பற்றி தடுப்புகள் வைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அப்பகுதியை சேர்ந்த பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Pollution, Thanjavur