முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையில் பரவலாக பெய்த கோடை மழை..

தஞ்சையில் பரவலாக பெய்த கோடை மழை..

X
கீழ

கீழ வாசல் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் 

Summer Rains in Tanjore : தஞ்சாவூரில் இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்து வெளுத்து வாங்கியது. 

  • Last Updated :
  • Thanjavur, India

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சை, அதிராம்பட்டினத்தில் 15 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், நேற்று தஞ்சையிலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பரவலாக பெய்தது.

தஞ்சையில் பரவலாக பெய்த கோடை மழை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தஞ்சையில் மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்து வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் தேங்கி கிடக்கும் மழை நீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழையின் காரணமாக கடந்த ஒரு வாரமாக தஞ்சை மாவட்டம் குளிர்ந்த நிலையில் காணப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Local News, Thanjavur, Weather News in Tamil