முகப்பு /தஞ்சாவூர் /

காண்போரை கவர்ந்த நையாண்டி மேளம், காவடி ஆட்டம்.. தஞ்சையில் மெய்சிலிர்த்துபோன பக்தர்கள்..!

காண்போரை கவர்ந்த நையாண்டி மேளம், காவடி ஆட்டம்.. தஞ்சையில் மெய்சிலிர்த்துபோன பக்தர்கள்..!

X
காண்போரை

காண்போரை கவர்ந்த நையாண்டி மேளம், காவடி ஆட்டம்

Tanjore Big Temple | தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் காவடி ஆட்டம் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தஞ்சை பெரிய கோவிலிலும் சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இந்த சிவராத்திரி விழாவில் மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், கயிலாய வாத்தியம், தெருக்கூத்து, நாத சங்கமம், பத்தி இசை, பட்டிமன்றம், பறை இசை, பரதநாட்டியம், குச்சிப்புடி, காவடி, கரகாட்டம், நையாண்டி மேளம், சிவன் - சக்தி நாடகம், பக்தி இசை பாடல்கள் போன்ற பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மேற்பார்வையில் தஞ்சை திலகர் திடலிலும் பெரிய கோவில் வளாகத்திலும் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிவராத்திரி அன்று பெரிய கோவிலில் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து சிவ வழிபாடு செய்தனர். மேலும் இரவு முழுவதும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதே வேளையில் திலகர் திடல் பகுதியில் மாலை 6 மணிக்கு தொடங்கிய கலை நிகழ்ச்சிகளில் நையாண்டி மேளம் மற்றும் காவடி ஆட்டம் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

First published:

Tags: Local News, Thanjavur