ஹோம் /தஞ்சாவூர் /

குழந்தைகளை காத்த கிருஷ்ணருக்கு 100 ஆண்டுகளாக நன்றி கடன் செலுத்தி வரும் கிராமம்! தஞ்சையில் சுவாரஸ்யம்

குழந்தைகளை காத்த கிருஷ்ணருக்கு 100 ஆண்டுகளாக நன்றி கடன் செலுத்தி வரும் கிராமம்! தஞ்சையில் சுவாரஸ்யம்

கிருஷ்ணர்

கிருஷ்ணர்

thanjavur | தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோனூர்நாடு வடக்கி கோட்டை கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்னதாக நிறுவிய கிருஷ்ணர் சிலையால் பல்வேறு பிரச்சனைகள் தீர்ந்ததாக நம்பப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோனூர்நாடு வடக்கி கோட்டை கிராமம் அமைந்துள்ளது..‌இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் ஐந்து பகுதிகளாக உள்ள இந்த கிராமத்தில் ஐந்து நாட்டாமைக்காரர்கள் உள்ளனர்.

இந்த கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயில் அமைந்ததற்கு ஒரு சுவாரசியமான செவி வழி சொல்லப்பட்ட ஒரு கதை உள்ளது என அந்த கிராமத்தை சேர்ந்த நாட்டாமைகார்கள் நம்மிடம் கூறினார்கள், அது என்னவென்று பார்ப்போம். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வடக்கி கோட்டை கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு நோய்வாய் ஏற்பட்டு இருந்தள்ளனர்.

மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த பல பெண்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமலும் இருந்துள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் வாயும் ஏற்பட்டு வந்துள்ளது. அந்த நேரத்தில்தான் இந்த கிராம மக்கள் ஒன்று கூடி கிருஷ்ணர் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர், அது கோயிலாக உருவானது. சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த கிராமத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வந்த நோய்களும் தீர்ந்து குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை வரங்களும் கிடைத்துள்ளது.. இதற்கு இந்த கிருஷ்ணர் தான் காரணம் என பொதுமக்கள் நம்பியுள்ளனர்.

அன்றிலிருந்து இந்த கிராம மக்களுக்கு பெரும் நம்பிக்கையாக நவநீத கிருஷ்ணர் இருந்து வருகிறார். இந்த ஒரு பிரச்சனை தீர்ந்த நாளிலிருந்து இன்று வரை கிருஷ்ணருக்கு நன்றி கடனாக ஒவ்வொரு வாரமும் இந்த கிராமத்தினர் வாரம் தோறும் சனிக்கிழமை பொங்கல் வைத்து கடவுளை வணங்கிய பிறகு மண்டகப்பொடியாக கிராமத்தினருக்கு அளித்து வருகின்றனர்.

இதில் முக்கியமாக ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குடும்பத்தினர் சுழற்சி முறையில் இந்த மண்டகப் பொடியை செய்து வருகின்றனர் என்பதும் சிறப்பிற்குரிய ஒன்றாகும். மேலும் இக்கோயிலில் முன்புறம் அமைந்துள்ள குலத்திற்கு நடுவில் கிருஷ்ணருக்கு நேர் எதிர்ப்புறம் மற்றொரு கிருஷ்ணர் சிலையையும் சில ஆண்டுகளுக்கு அமைத்துள்ளார்கள்.

குளத்தில் நடுவில் உள்ள கிருஷ்ணரை ஒவ்வொரு முறையும் வழிபடும்போது குளத்தில் இறங்கி நீச்சல் அடித்து தான் மாலை மாலை போட்டு வந்து வணங்குகின்றனர்...

குளத்தில் இளைஞர்களை தவிர எல்லாராலும் செல்ல முடியாது என்ற காரணத்தினால் தற்போது நடைபாதை அமைக்கும் பணியையும் தொடங்க உள்ளதாக கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்...

இதுபோன்ற சிறு கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு பல சுவாரஸ்யமான கதைகளும் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

First published:

Tags: Local News, Thanjavur, Village