ஹோம் /தஞ்சாவூர் /

நன்னிலம் சரஸ்வதி கோயிலில் நடைபெறும் வித்யாரம்பம் நிகழ்ச்சி - நீண்ட வரிசையில் காத்திருக்கும் தஞ்சை மக்கள்!

நன்னிலம் சரஸ்வதி கோயிலில் நடைபெறும் வித்யாரம்பம் நிகழ்ச்சி - நீண்ட வரிசையில் காத்திருக்கும் தஞ்சை மக்கள்!

வித்யாரம்பம் நிகழ்ச்சி

வித்யாரம்பம் நிகழ்ச்சி

இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனிக்கோவில் அமைந்துள்ளது கூத்தனூரில் மட்டும் தான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

நன்னிலம் அருகே அமைந்துள்ள சரஸ்வதி கோயிலில் விஜயதசமியையொட்டி, வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கூத்தனூரில் கல்விக்கடவுளான சரஸ்வதி கோவில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே சரஸ்வதிக்கு என்று தனிக்கோவில் அமைந்துள்ளது கூத்தனூரில் மட்டும் தான்.

இக்கோவிலில் சரஸ்வதி வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருப்பாள். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

ALSO READ | ஆசியாவின் மிக பழமையான நூலகம்.. அதுவும் நமது தஞ்சையில்! யாரும் மிஸ் பண்ணாம போய் அந்த பொக்கிஷத்த பாத்திருங்க..!

அதன்படி, இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவில் அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான 9-வது நாளில் சரஸ்வதி பூஜையன்று அம்மனுக்கு பாத தரிசனம் நடைபெற்றது.

அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்தார்கள். இதனை தொடர்ந்து இன்று விஜயதசமியையொட்டி, இக்கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் கல்வியில் சிறக்க குழந்தையின் விரல் பிடித்து தானியத்தில் 'அ' எனும் எழுத்தை எழுதி கல்வியை தொடங்குவர்.

குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி பயணத்தை இங்கிருந்து தொடங்குகின்றனர். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிபடுவர். தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Tanjore, Thanjavur, Vijaya Dasami