முகப்பு /தஞ்சாவூர் /

வேங்கைவயல் சம்பவம் : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தஞ்சையில் விசிக போராட்டம்..

வேங்கைவயல் சம்பவம் : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தஞ்சையில் விசிக போராட்டம்..

X
தஞ்சை

தஞ்சை

Viduthalai Siruthai Katchi Protest : வேங்கைவயல் சம்பவத்தை கண்டித்து தஞ்சாவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு செய்வதற்காக ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை செய்தபோது அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பட்டியல் இனத்து மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

மேலும் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பட்டியல் இனமக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு அழைத்து சென்று வழிபாடு செய்தார். மேலும் அந்த டீக்கடை உரிமையாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் கோவிலில் சாமி ஆடி தரக்குறைவாக பேசிய மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த இழிச்செயலை செய்தவர்களை கைது செய்யக்கோரி மைய மாவட்ட செயலாளர் சொக்கா ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை ரயில் எதிர்ப்புறம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ‌50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேரிகார்டு வைத்து போக்குவரத்து மாற்றப்பட்ட நிலையில் 2 பெண் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Local News, Thanjavur