Home /thanjavur /

வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு... தஞ்சாவூர் ரசிகர்கள் என்ன சொல்றாங்க...

வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு... தஞ்சாவூர் ரசிகர்கள் என்ன சொல்றாங்க...

வெந்து

வெந்து தணிந்தது காடு..

Thanjavur | சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
இயக்குநர் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இவர்களது கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால் இந்தப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

கதையின் கரு:

தென் தமிழகத்தில் இருந்து குடும்ப வறுமை காரணமாக மும்பைக்கு வரும் ஒரு இளைஞனை சூழ்நிலை எப்படி கேங்க்ஸ்டராக மாற்றுகிறது என்பதே ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதை. படத்தின் ஒட்டுமொத்த ஆணிவேரையும் தனது நடிப்பால் தாங்கி நிற்கிறார் சிலம்பரசன். இன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சிம்புவுக்கு வைக்கப்பட்டுள்ள பேனர்


மேலும் படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். சிம்புவின் ரசிகர்களுக்கு இப்படம் மிக பெரிய விருந்தாக அமைந்ததுள்ளது.

படம் பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள்


படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் சிம்புவின் நடிப்பை சிலாகித்துள்ளனர். இசையும் சிறப்பாக இருப்பதாக கூறினர். சிலர் படத்தின் இரண்டாம் பாதி மெதுவாக நகர்வதாகவும் விமர்சனம் செய்துள்ளனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி