முகப்பு /தஞ்சாவூர் /

கருட சேவையில் காட்சியளித்த வெங்கடேச பெருமாள்.. தஞ்சையில் கண் விழித்து வழிபட்ட பக்தர்கள்..! 

கருட சேவையில் காட்சியளித்த வெங்கடேச பெருமாள்.. தஞ்சையில் கண் விழித்து வழிபட்ட பக்தர்கள்..! 

X
கருட

கருட சேவையில் காட்சியளித்த வெங்கடேச பெருமாள்

Thanjavur Prasanna Vengadesa Perumal Temple : பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அக்ஷய திரிதியை முன்னிட்டு எம்பெருமான் கருட சேவை தஞ்சையில் உள்ள 4 வீதிகளில் வலம் வந்தார். 

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் அய்யங்கடை வீதியில் நாலுகால் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி,  பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் நாலுகால் மண்டபத்தில் அமைந்துள்ள இக்கோயிலும் ஒன்றாகும். இந்நிலையில், இக்கோயிலின் மூலவராக காட்சியளிக்கும் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு அக்ஷ யதிரிதியை‌ முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

காலை 6 மணிக்கு தஞ்சையில் உள்ள 4 ராஜ வீதிகளிலும் கருட சேவையில் பெருமாளை காட்சியளித்தார்.  எம்பெருமானை காண காலை 5 மணி முதலே அப்பகுதி சேர்ந்த பக்தர்கள் காத்திருந்து வீதியில் உலா வந்த பெருமாளின் தரிசனத்தை பெற்றனர்.  ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பிரசன்ன வெங்கடேச பெருமாள் மூலவர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியே அக்ஷயதிரிதி. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நாளன்று, தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு. அதேபோல் காலையில் கடவுளை தரிசித்தால் மீண்டும் மீண்டும் வந்து தரிசிக்ககூடிய பாக்கியம் கிடைக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நாளில் கருட சேவையில் பெருமாளை காலையில் தரிசிப்பது ஏன் அவசியம் என்றால் சூரிய பகவான் தோன்றும் அந்நேரத்தில் பெருமாள் எப்படி கஜேந்திரனை (யானை) வடிவில் உள்ள பக்தனை முதலையிடமிருந்து) காப்பாற்றினாரோ அதே போல் இந்நாளில் காலையில் கருட சேவையில் வரும்  பெருமாள் பக்தர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றுவார்.

top videos
    First published:

    Tags: Local News, Thanjavur