அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6 நாள் அன்று இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கருக்கு காவி உடையுடன் ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்ர் பெரும் சர்சயை ஏற்படுத்திய நிலையில் தஞ்சையில் விடுதலை கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 6-ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கருக்கு காவி உடையுடன் பட்டையிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அந்தப் போஸ்டரில் காவியத் தலைவனின் நினைவைப் போற்றுவோம் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அம்பேத்கருக்கு காவி உடையுடன் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளரான குருமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து திருமாவளவன் ட்விட்டர் பதிவில், ‘சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை - தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 லட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப்பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ALSO READ | பனிப்பொழிவுடன் தஞ்சை பெருவுடையார் கோவில்.. போட்டோஸ்
சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்" என அவர் பதிவிட்டுள்ளார். இந்தநிலையில், அம்பேத்கருக்கு காவி உடையுடன் போஸ்டர் ஒட்டிய செயலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தஞ்சை கீழ வாசல் சாலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சொக்கா ரவி-யின் தலைமையில் இந்து மக்கள் கட்சியியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.. காவல் துறையினர் கட்டுபாட்டில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambedkar, Local News, Thanjavur, VCK