முகப்பு /தஞ்சாவூர் /

வீடில்லா மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்...

வீடில்லா மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்...

X
கண்டன

கண்டன ஆர்ப்பாட்டம்

Thanjavur News | வீட்டு மனை பட்டா வழங்கிய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதி மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தஞ்சை ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிலோன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சொந்தமாக வீடு கிடையாது. இதனால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாஞ்சிக்கோட்டை சாலை பால் பண்ணை எதிரில் மழைநீர் செல்லும் வழி ஒட்டிய பகுதியில் உள்ள இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு பட்டா கேட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கொட்டகை அமைப்பதற்கான குச்சி, கம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் திரண்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினரும் வந்தனர்.

பின்னர் அந்த இடத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகளிடம் புறம்போக்கு இடத்தை எங்களுக்கு வீட்டு மனை பட்டாவாக தாருங்கள் என்று கேட்டனர். இதனை தொடர்ந்து அந்த நிலத்தின் உரிமையாளர் நான் தான் என கூறி ஒருவர் வந்து போலீசாரிடம், நான் சிராஜ்பூர் நகர் என உருவாக்கி இந்த இடத்தை சிறிது சிறிதாக விற்று வருகிறேன் என்றும் இந்த நிலத்திற்கான பட்டா என்னிடம் உள்ளது. இது புறம்போக்கு இடம் கிடையாது என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனையடுத்து இரு தரப்பும் மாறி மாறி கருத்து தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்த்துறையினர் இந்த நிலம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாஞ்சிக்கோட்டை பகுதி  மக்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குடிமனை பட்டா வழங்க கண்டன ஆர்ப்பாட்டத்தை தஞ்சை ரயில் நிலையம் அருகே நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் மறியல் பகுதி மக்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Local News, Thanjavur