Home /thanjavur /

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? 

தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? 

வடுவூர்

வடுவூர் பறவைகள் சரணாலயம் பயணம் போகலாமா..

Vaduvur Birds Sanctuary | தஞ்சாவூர் - மன்னார்குடி செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து 29 கி.மீ தொலைவில், வடுவூர் ஏரி சுமார் 128.10 ஹெக்டர் அதாவது 316 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமாக 1999ல் மாற்றப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தமிழ்நாட்டில் மொத்தம் 15 பறவைகள் சரணாலயம் உள்ளது. அதிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது தஞ்சாவூர் அருகிலுள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம். இது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த சிறப்பு தொகுப்பில் காணலாம்..

தஞ்சாவூரின் பக்கத்து மாவட்டமான திருவாரூரில், தஞ்சாவூர் - மன்னார்குடி செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து 29 கி.மீ தொலைவில், வடுவூர் ஏரி சுமார் 128.10 ஹெக்டர் அதாவது 316 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

வடுவூர் பறவைகள் சரணாலயம்


இந்த ஏரிக்கு பகுதிக்கு நெகிழி பைகள் மற்றும் கெமிக்கல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்ல கூடாது. இந்த ஏரியை பார்க்க கட்டணமாக 2-10-ரூ வரையிலும் நிழற்படக் கருவிக்கு 50ரூ, கையடக்க புகைப்பட கருவிக்கு 300-ரூ மற்றும் வாகன நிறுத்தத்திற்கு 20-முதல் 100 வரை வசூலிக்கப்படுகிறது.

வடுவூர் பறவைகள் சரணாலயம்


வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமாக 1999ல் மாற்றப்பட்டது. வடுவூர் ஏரியை சுற்றி வளமான ஈரநிலங்கள் அதிக அளவில் இருப்பதால் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து 40க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த பல வெளிநாட்டு பறவைகள் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் ஆண்டுதோறும் 20,000 பறவைகள் வடுவூர் சரணாலயம் வந்து செல்கிறது.

சீசன் காலம்:

வடுவூர் பறவைகள் சரணாலயம்


ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிக்கும் போது உயிர் வாழ ஏற்றதாக இந்த ஏரி அமைந்துள்ளது.
இதனால் இந்த பறவைகள் உணவிற்காகவும், இனப் பெருக்கத்திற்காகவும் வருகிறது, அதிக பட்சமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளது.

என்ன பறவைகள் பார்க்கலாம்?:

வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் வெள்ளை அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா, ஊசிவால் வாத்து, நீர்க்காகம், கிளுவை, ஹெரான், துடுப்பு வாயன், பாம்புத் தாரா, நாமக்கோழி, நத்தை குத்தி நாரை மற்றும் நீளவால் தாழைக்கோழி போன்ற 40க்கும் மேற்பட்ட வகையான நீர் பறவைகள் உள்ளன.

தண்ணீர் பயன்பாடு:

வடுவூர் பறவைகள் சரணாலயம்


மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவகை செய்து விடுகிறது. இங்கு நடைபாதை, பறவைகளைப் பார்க்கக் கோபுரங்கள், அமர்ந்துகொள்ள நாற்காலிகள், சிமெண்ட் இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நடைபாதை முழுவதுமாக மரங்கள் சூழ்ந்து இருப்பதால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சரணாலயம் எல்லா நாட்களிலும் திறந்து இருக்கும். ஆனால் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இங்கு வருகை தருவது சிறந்ததாகும் சிறந்த நேரம் காலை மற்றும் மாலை நேரங்கள் ஆகும். இந்த நேரங்களில் பறவைகளை அதிக அளவில் அருகிலேயே காணலாம்.

இந்த வடுவூர் பறவைகள் சரணாலயம் தஞ்சை அருகிலுள்ள முக்கியமான சுற்றுலா  தலமாக திகழ்கிறது.
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி