முகப்பு /தஞ்சாவூர் /

ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவியல் பூங்கா.. விரைவில் திறக்குமா தஞ்சை மாநகராட்சி?

ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவியல் பூங்கா.. விரைவில் திறக்குமா தஞ்சை மாநகராட்சி?

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருளானந்த நகர் பூங்கா

Tanjore Arulanandha Nagar Park : தஞ்சையில் கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் பூங்காவின் பணிகள் முடிவடந்த நிலையில் பூட்டியே கிடக்கிறது.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாநகராட்சியில் அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் கோளரங்கத்துடன் இணைந்த பிரமாண்டமான அறிவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை, திருச்சி, கோவை, வேலூர் போன்ற மாநகரங்களில் கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் உள்ளதை போன்று, தஞ்சாவூரிலும் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள அருளானந்த நகரில் 2.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.50 கோடி மதிப்பில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றுடன் கூடிய பூங்காவாக அறிவுத்திறனை வளர்க்க கூடிய வகையில், கணிணி கோட்பாடுகளை உணர்த்தும் பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன.

தஞ்சாவூர் அருளானந்த நகர் பூங்கா

விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணைகளான ஜி.எஸ்.எல்.வி-க்கு 33 அடி உயரத்திலும், பி.எஸ்.எல்.வி.-க்கு 25 அடி உயரத்திலும் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் தங்களது பாடங்களை விளையாட்டுடன் கற்பதற்காக ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ள இப்-பூங்காவின் பணிகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில் இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் இந்த நேரத்தில் பூங்காவை திறந்தால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்‌. எனவே இந்த ஸ்டெம்ஸ் பூங்கா எப்போது திறக்கப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, Thanjavur