ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் ரூ‌.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடைகள் பாராக செயல்படும் அவலம்

தஞ்சையில் ரூ‌.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடைகள் பாராக செயல்படும் அவலம்

X
தஞ்சை

தஞ்சை கடைகள்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாத கடைகள் குடிகாரர்களின் பாராக செயல்பட்டுவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு கட்டப்பட்ட 25-க்கும் மேற்பட்ட கடைகள் தற்போது வரை திறக்கப்படாததால் குடிமகன்களுக்கு குடிக்கும் இடமாகவும், இரவு நேரங்களில் சில அசம்பாவித செயல்களும் நடந்து வருகிறது.

1995-ம் ஆண்டு தஞ்சையில் 8-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்செந்தூர், கன்னியாகுமரி, மதுரை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குப்பையாக கிடக்கும் இடம்

அதேபோல் கும்பகோணம், தஞ்சை பழைய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வல்லம், சர்க்கரை ஆலை, கந்தர்வக்கோட்டை ஆகிய இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்து நிலையத்தை சுற்றிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிக் கல்லூரிகள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் உள்ளன.

திறக்கப்படாத கடைகள்

திறந்த வெளி பாராக எந்நேரமும் பிஸியாக இருக்கும் இந்த பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள 7 ஆண்டுகளாக திறக்கப்படாத கடைகளில் குடிமகன்கள் மற்றும் சமூக விரோதிகளின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகிறது.

சிதறிக் கிடக்கும் பாட்டில்கள்

புதிய பேருந்து நிலையத்தின் முகப்பில் உள்ள மதுக்கடையில் இருந்து, மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி வந்து, பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள அருகில் உள்ள கடைகளில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

80 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை சிறு நீர் கழிப்பதற்கும், இரவு நேரங்களில் அறுவறுக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த கடைகள் திறந்தவெளி பாராக மாறி வருவதுதோடு மட்டுமல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய பயணிகள், ‘கடைகளை சீரமைத்து வளாகம் முழுவதும் தடுப்பு சுவர் போட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் அட்டூழியங்களை ஒழித்து கட்ட வேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.

First published:

Tags: Local News, Thanjavur