ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை செல்ல சாலை வசதி இல்லாமல் தவித்து வரும் 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...

தஞ்சை செல்ல சாலை வசதி இல்லாமல் தவித்து வரும் 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...

தஞ்சை:

தஞ்சை: உஞ்சியவிடுதி வெட்டிக்காடு சாலை

Thanjavur Latest News | தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் உஞ்சியவிடுதி வெட்டிக்காடு செல்லும் பகுதியில் சுமார் 7 கி.மீட்டர் தூரமுள்ள கல்லணை கால்வாய் ஆற்றங்கரை சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக ஒரத்தநாடு, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு ஊரணிபுரம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உஞ்சிய விடுதி கிராமத்தில் இருந்து வெட்டிகாடு வழியாக தஞ்சை செல்லும் கல்லனை கால்வாய் ஆற்றோர சாலையில், கற்கள் சிதறி ரோடு போட்ட அடையாளம் கூட இல்லாமல் படுமோசமான நிலையில் உள்ளது..

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் உஞ்சியவிடுதி வெட்டிக்காடு செல்லும் பகுதியில் சுமார் 7 கி.மீட்டர் தூரமுள்ள கல்லணை கால்வாய் ஆற்றங்கரை சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக ஒரத்தநாடு, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு ஊரணிபுரம், உஞ்சியவிடுதி,  வெட்டுவாக்கோட்டை, அம்மன்குடி, இலுப்பை விடுதி, வெள்ளதேவன் விடுதி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

தஞ்சை

மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இந்த சாலையின் வழியாகத்தான் நெல் விதைகள், உரங்கள் ஆகிய வற்றை விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.

அதேபோல, அறுவடை செய்யப்படும் நெற்கதிர்கள் உள்ளிட்டவைகளையும் இந்த சாலையின் வழியாகத் தான் கொண்டு வர வேண்டும். இவ்வாறு இப்பகு தியை சேர்ந்த பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்தரக்கூடிய இந்த தார்ச்சாலை தற்போது பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது.

மேலும் படிக்க:  தஞ்சாவூர் மாவட்டத்தில் மறக்காமல் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.!

சாலை சீரமைக்கப்படுமா?

இதனால் இந்த சாலையின் வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

உஞ்சியவிடுதி-வெட்டிக்காடு சாலை

மேலும் இந்த சாலை வழியே உள்ள 1933- ப்ரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் ஒன்று இருச்கர வாகனம் மட்டுமே செல்லும் அளவில் குறுகியதாக இருப்பதால் விவாசாயத்திற்காக பயண்படுத்தபடும் ட்ராக்டர் கூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் படிக்க:  தஞ்சை பெரிய கோவிலில் இத்தனை பிரபலங்களின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா?

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் ஊரணிபுரம், உஞ்சிய விடுதி பகுதிகளை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வெட்டிக்காடு, ஒரத்தநாடு மற்றும் தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும் எனில், அதிக தூரமுள்ள திருவோணம் வழியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொது மக்களுக்கு நேரமும், பணச்செலவுகளும் அதிகம் ஏற்படுகிறது. எனவே உஞ்சியவிடுதி-வெட்டிகாடு சாலையை சீரமைத்து பாலத்தையும் அகலப்படுத்த வழிவகை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur