ஹோம் /தஞ்சாவூர் /

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தஞ்சாவூர் கலெக்டர் அறிவிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தஞ்சாவூர் கலெக்டர் அறிவிப்பு

உதவித்தொகை

உதவித்தொகை

Thanjavur District | வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினஷே் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான அரசின் உதவித்தொகை தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில், தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31-12-2022 அன்றைய தேதியில் 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும்.

முறையாக பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 31-12-2022 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிக பட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.

பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்க கூடாது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ, 600, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், எழுதப்படிக்க தெரிந்த மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.600, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்டப்படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது.

Must Read : அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி அல்லது கல்லூரி மாற்றுச்சான்றிதழ், அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பப்படிவத்தை தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி கழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Thanjavur, Youths