ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் பொங்கலை முன்னிட்டு அறுவடைக்குத் தயாரான மஞ்சள் கொத்துகள்

தஞ்சையில் பொங்கலை முன்னிட்டு அறுவடைக்குத் தயாரான மஞ்சள் கொத்துகள்

X
அறுவடைக்காக

அறுவடைக்காக மஞ்சள்

Thanjavur | தஞ்சாவூரில் பொங்கலை முன்னிட்டு மஞ்சள் கொத்துகள் அறுவடைக்குத் தயாராகிஉள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து ஆகும். பொங்கல் பண்டிகையன்று புதுப்பானையில் மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துக்கள் கட்டி அலங்காரம் செய்து, புதிய அரிசியால் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கரும்பு வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அறுவடைக்கு காத்திருக்கும் மஞ்சள்

அறுவடைக்கு தயார்:

பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்கப்படுகிறது. இந்த மஞ்சள் பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பே அறுவடை செய்யப்பட உள்ள நிலையில் தஞ்சையில் பல பகுதிகளில். விவசாயிகள் மஞ்சள் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்.

அறுவடைக்கு காத்திருக்கும் மஞ்சள்

ஒரத்தநாடு அருகே உள்ள பல கிராமங்களில் பலர் மஞ்சள் சாகுபடி செய்து வரும் நிலையில் பாச்சூர் கிராமத்தில் மஞ்சள் சாகுபடி செய்து வரும் சில விவசாயிகளிடம் கேட்டு அறிந்தோம்.

பட்டுக்கோட்டை| போகி பண்டிகைக்கு இந்த பொருட்களை தீயிட்டு எரிக்க கூடாது - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

இந்த ஆண்டு அதிக மழை பொழிவினாலும் பனி பொழிவினாலும் மஞ்சள் கொத்துகள் அழுகி வாடிய நிலையில் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளது என ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் கோட்டையில் உள்ள சில விவசாயிகள் வேதனை தெரிவித்துள்னர்.

செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.

First published:

Tags: Local News, Thanjavur