முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / Video: பழைய பாட்டில்கள் சேகரித்த பழங்குடியின பெண்.. காலணியால் சரமாரியாக அடித்த நபர்: தஞ்சாவூரில் பரபரப்பு!

Video: பழைய பாட்டில்கள் சேகரித்த பழங்குடியின பெண்.. காலணியால் சரமாரியாக அடித்த நபர்: தஞ்சாவூரில் பரபரப்பு!

பழங்குடியின பெண்

பழங்குடியின பெண்

பழங்குடி பெண்களை தாக்கிய சுவாமிநாதனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பழைய பாட்டில்களை சேகரித்த பழங்குடியின பெண்ணை, ஒருவர் காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள குறிச்சிநகர் பகுதியில் சாலையோரம் கிடந்த பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர். அப்போது அங்கு வந்த, அதே பகுதியைச் சேர்ந்த திமுக வடக்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தீபலட்சுமியின் கணவர் சுவாமிநாதன், அந்த பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், காலணியால் தாக்கினார்.

' isDesktop="true" id="951731" youtubeid="Zdb4XgVSU6M" category="thanjavur">

இதையும் வாசிக்க: ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் பழங்குடியினரின் கைவண்ணப் பொருட்கள்!

இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடுக்கு தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுவாமிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, பழங்குடி பெண்களை தாக்கிய சுவாமிநாதனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Thanjavur