தஞ்சையில் சாலை விரிவாக்கத்திற்காக கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள, பூ மார்க்கெட்டின் கடைகளை மாநகராட்சி இடித்த நிலையில் பூக்களை விற்க இடம் இல்லாததால் பூ வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 82 ஆண்டுகளாக பூமார்க் கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு தஞ்சை மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
இதேபோல் இங்கிருந்து தஞ்சை, திருவாரூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நீடாமங்கலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்நிலையில், பூ மார்க்கெட் 'டில் உள்ள சாலையை சிலர் ஆக்கிரமித்து கடைகளை அமைத்ததால், போக்குவரத் துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நாள்தோறும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். சாலை விரிவாக்கம் மேலும், கோவிலுக்கு சொந்த மான இடத்தில் மண் சுவர்களால் கட்டப்பட்ட கடைகள் உள்ளதால், அந்த கடைகளின் கட்டுமானங்கள் பலவீனமடைந்து காணப்பட்டது.
இதையும் படிங்க : மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் - தஞ்சாவூரில் போக்குவரத்து மாற்றம்
இதையடுத்து கடைகளை புதிதாக கட்ட திட்டமிட்டப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சாலையை அகலப்படுத்துவதாக கூறி சுமார் 20 அகலத்துக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 11ம் தேதி திடீரென சாலையோரம் இருந்த பூக்கடைகளை இடித்து அகற்றியது. மேலும் அந்த இடத்தில் கடைகளை வைத்திருந்தவர்களை பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள வாகன நிறுத்துமி டத்தில் வியாபாரம் செய்ய வியா பாரிகளை மாநகராட்சி நிர்வாகம் அனுமதித்தது.
அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர் :
பூமார்க்கெட்டில் இருந்த 60 கடைகளில் 40 கடைகள் பழைய பஸ் நிலையம் அருகே சென்றது. மீதமுள்ள கடைகள் பூச்சந்தையிலேயே செயல்பட்டது. இதற்கிடையில் பூக்கள் கட்டும் பணியில் ஈடுபடுவர்கள்.
பூச்சந்தைச் சார்ந்து இருப்பவர்கள் என பலரும் பூச்சந்தையை இடமாற்றினால் பாதிக்கப்படுவார்கள் என.கூறி மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் உள்ளிட்ட பலரிடம் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து டிச-12ம் தேதி மாலையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பூ வியாபாரிகள், பூச்சந்தையை குத்தகைக்கு எடுத்தவர்கள் அதிக அளவில் பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும், மேலும் வெளியேறிய பூ வியாபாரிகளுக்கு நிரந் தர இடம் தர வேண்டும் என கோரினர்.
அதேபோல் பூச்சந்தை யிலேயே வியாபாரம் செய்யும் வியாபாரிகள், வெளியேறியவர்கள் மீண்டும் வியாபாரம் செய்ய பூச்சந்தைக்கு வரவேண்டும் என கூறினர். இதையடுத்து கோட்டாட் சியாரஞ்சித் எவ்வித சட்டஒழுங்கும் இல்லாமல் அவரவர் விருப்பம் போல் வியாபாரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நொந்து போன வியாபாரிகள் :
இதையடுத்து 13-ம் தேதி அதி காலை பழைய பஸ் நிலையம் எதிரே பூ வியாபாரம் செய்ய சென்ற வியாபாரிகளை, மாநகராட்சி நிர்வாகத்தினர் வியாபாரம் செய்ய அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து ஜூபிடர் தியேட்டர் அருகே உள்ள மாநக ராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடைகளை போட்டனர். அங்கும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது டன் கணக்கில் பூக்கள் விணாகிவிட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போன பூ வியாபாரிகள் தற்போது கடந்த ஒரு வாரமாக விளார் பகுதியில் உள்ள சைலஜா திருமண மண்டபத்தில் பூ வியாபாரம் செய்து வருகின்றனர்...இது முழுக்க முழுக்க வியாபாரிகளின் முயற்சியில் இங்கு தற்போது வரை வியாபாரம் நடக்கிறது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், “நாங்கள் அரசை தான் நம்பியிருக்கிறோம், நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை மிகவும் ஒரு மோசமான சூழலில் இருந்து வருகிறோம். தயவு செய்து மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு தற்காலிக இடம் அமைத்து தர வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore