ஹோம் /தஞ்சாவூர் /

பொன்னியின் செல்வன் எஃபெக்ட்.... தஞ்சை பெரிய கோவிலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

பொன்னியின் செல்வன் எஃபெக்ட்.... தஞ்சை பெரிய கோவிலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

தஞ்சை

தஞ்சை பெரிய கோவில்

Thanjavur | பொன்னியின் செல்வன் படம் வெளியான நிலையில், தஞ்சை பெரிய கோவிலுக்கு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் சென்றுவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை பல ஜாம்பவான்களும் முயற்சி செய்து முடியாத நிலையில், இயக்குநர் மணிரத்னம் அதை சாதித்துக் காட்டி உள்ளார்.

தமிழர்களின் பொற்கால ஆட்சி என்று சொல்லப்படும் ராஜ ராஜ சோழனின் ஆட்சி நடப்பதற்கே முக்கியமான காரணமாக அமைந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே பொன்னியின் செல்வன் கதை உருவாக்கப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30 தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியானது. தற்போது பொன்னியின் செல்வன் படம் பாக்ஸ் ஆபிஸில் மூன்றே நாளில் 200 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது.

தஞ்சை பெரிய கோவில்

அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் படம் பார்த்து தஞ்சை பெரிய கோயிலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். அது மட்டுமின்றி விடுமுறை நாட்கள் என்பதாலும் வெளி, மாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பலர் குடும்பத்தினருடன் பெரிய கோயிலுக்கு வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோவில்

பொதுவாக சாதாரண நாட்களிலும் பெரிய கோயிலுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்துகொண்டே தான் இருக்கும். ஆனால் பொன்னியின் செல்வன் எஃபெக்ட் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கூட்டம் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இருவழியில் பாதைகளை அமைத்துள்ளனர்.

தஞ்சை பெரிய கோவில்

இதுகுறித்து வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சை பெரிய கோவிலுள்ள வந்த சில சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘முதல் முறையாக பெரிய கோயிலுக்கு வந்துள்ளோம். பார்பதற்கே மிகவும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும்‌ உள்ளது. பொன்னியின் செல்வன் படம் பார்தோம். படம் பார்த்து விட்டு இங்கு வருவது கூட நல்ல ஒரு Vibe-யை தருகிறது.

ஒரு முறை வந்து பார்த்து செல்ல வேண்டிய இடம் இது இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயிலை ஆயிரம் முறை வந்து பார்த்தால் தான், இங்கு உள்ள கட்டிட கலை பார்பதற்கும் மற்றும் கல்வெட்டுகளை படிப்பதற்கும் சரியாக இருக்கும் போல் உள்ளது’ என்று தெரிவித்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur