Home /thanjavur /

தஞ்சையில் ஒரு குட்டி கேரளா..! வயல்களுக்கு நடுவே ஆற்றில் குளியல் போடலாம்..

தஞ்சையில் ஒரு குட்டி கேரளா..! வயல்களுக்கு நடுவே ஆற்றில் குளியல் போடலாம்..

தஞ்சையில்

தஞ்சையில் ஒரு குட்டி கேரளா..!

Unknown Tourist Places in Thanjavur : தஞ்சையில் வார இறுதி நாட்களில் ஆறுகளில் பொழுதை கழிக்கும்‌ இளைஞர்கள். நெய்வாய்க்கால், சூரக்கோட்டை அணை போன்ற பகுதிகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur
என்னதான் கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் என சுற்றுலா தலங்களை தேடிச் சென்று  மகிழ்ச்சியடைந்தாலும், சொந்த ஊரில் உள்ள ஆறு‌கள் போன்ற இயற்கை சூழல் அமைந்துள்ள பகுதிகளில் பொழுதை கழிப்பதே ஒரு தனி சுகம் என்று  கூறும் நம் தஞ்சை இளைஞர்கள் கேரளாவை நினைவுபடுத்தும் இயற்கை எழில் கொஞ்சும் சூரக்கோட்டை அணை மற்றும் நெய்வாசல் வாய்க்கால்களில் குளித்து மகிழ்ந்து, பொழுதை கழிக்கிறார்கள்.

தஞ்சாவூர் என்றாலே கோயில்களும், கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு வயல்வெளிகளும், ஆறுகளும் நிறைந்து காணப்படுகிறது, தஞ்சையில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் குளிப்பதற்கு ஏற்றார் போல் பல ஆறு மற்றும் வாய்க்கால் பகுதிகள் அமைந்துள்ளது..

நெய்வாய்க்கால், தஞ்சாவூர்


ஒவ்வொரு ஆண்டும் ஆற்றில் நீர் திறந்து விடும் போது,  இளைஞர்களுக்கு சந்தோஷம் தொற்றிக்கொள்ளும்.. ஆற்றில் குளிப்பது, மீன் பிடித்து மகிழ்வது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு மகிழ்கின்றனர்.

நெய்வாய்க்கால், தஞ்சாவூர்


இந்த வகையில்  தஞ்சையில் உள்ள சூரக்கோட்டை அணை, நெய்வாசல் தென்பாதி , நெய்வாய்க்கால் போன்ற பகுதிகள்  சுற்றுலா தலமாக மாறி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

நெய்வாய்க்கால், தஞ்சாவூர்


நெய்வாசல் மற்றும் சூரக்கோட்டை தஞ்சை நகரத்தின்‌ மிக அருகில் உள்ள கிராம பகுதியாகும், இப்பகுதியில் கிராமப்புற மக்கள் மட்டுமின்றி நகரத்திலும் தற்போது அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர்.

நெய்வாய்க்கால், தஞ்சாவூர்


வயல் சூழ்ந்து நடுவில் ஆறு செல்வது கண்ணுக்கு குளிர்ச்சியான ரம்மியமான காட்சியாக உள்ளது.  வெளியூர் வாசிகள் இதனை பார்க்கும்போது ‘இதென்ன குட்டி கேரளாவா இருக்கே’ என வியந்து பார்க்கின்றனர்..  தஞ்சை  நகரவாசிகள் பலருக்கும் கூட இந்த நெய்வாசல், சூரக்கோட்டை போன்ற இடங்களை அறியாமல் உள்ளனர்..

நெய்வாய்க்கால்


பலர்‌ ஆறுகளில் குளிப்பதை விட‌ குழந்தைகளை அழைத்து வந்த இந்த அழகான சூழலை ரசித்து செல்வதால், தஞ்சை உள்ளூர் வாசிகளுக்கு தற்போது இது சிறிய‌ சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து இங்கு குளிக்க வந்த இளைஞர்கள் கூறுகையில்,  “விடுமுறை நாட்களில் இங்கு வந்து நண்பர்களுடனும் பொழுதை கழிப்பது, வழக்கம், தற்போது தஞ்சை நகரத்து வாசிகள்‌‌ பலர் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் குழந்தைகளுடன், வந்து அழகை ரசித்து பொழுதை கழித்து செல்கின்றனர்.” என்று கூறினர்.

எப்படி செல்வது?

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து விளார் செல்லும் சாலையில், இருந்து வெட்டிக்காடு பகுதிக்கு பிரிந்து செல்லும் சாலையில் உள்ள நெய்வாசல் தென்பாதி பகுதியில், நெய்வாசல் வாய்க்காலும் அங்கிருந்து 3 கிமீ தொலைவில் சூரக்கோட்டை அணையும் அமைந்துள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் இந்த இடங்கள் அமைந்துள்ளன..

Thanjavur Neyvasal Map
நெய்வாசல் தென்பாதி
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி