தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை மருத்துவக்கல்லூரி துணை மின் நிலையத்தில் நாளை (22.02.2023) பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று மின்வரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின் தடை பகுதிகள்:
மின்நகர் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயரழுத்த மின்பாதைகளில் நாளை (புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை வல்லம், சென்னம்பட்டி, மின்நகர் மற்றும் ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவையாறு மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல, தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
Must Read : மலைப்பயணம்... அருவிகளில் குளியல்.. இது திருச்சியில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கம்...!
மேலும், ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டான்பட்டு, கொல்லங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார்இருப்பு, மடிகை, காட்டூர், மேலஉளூர், கீழஉளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur