ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Thanjavur District | தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் நாளை (06-12-2022) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறக்கூடிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : தேனியில் குருவாக இருக்கும் சிவன்... நாகதோஷம் நீக்கும் தீர்த்ததொட்டி முருகன் கோயில்.!

மின்தடை பகுதிகள்:

கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன் குடிக்காடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார்குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur